B.A., (Saiva Sidhantham)

சைவ சித்தாந்தம்


சைவ சித்தாந்தம் என்னும் தத்துவப் பிரிவு சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறியாகும். சைவ சமயத்திற்கு அடிப்படையாக விளங்குவது சித்தாந்தம் என்னும் கொள்கையாகும். சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப் பொருள்படும். உலகத் தத்துவ அரங்கில் தனிப் புகழ் பெற்ற தத்துவம் சைவ சித்தாந்தம் ஆகும். எட்டாம் நூற்றாண்டு முதலாகவே நம் நாட்டின் சமயக் கொள்கைகளில் குழப்பங்கள் நிறைந்திருந்தன. அக்குழப்பங்களை நீக்கி மக்கள் தெளியும் பொருட்டு நற்சிந்தனை கொண்ட அருளாளர்களால் அருளிச் செய்த செந்தமிழ் நூல்கள் பதினான்கு ஆகும். சைவ சிந்தாந்தம் பற்றிய ஒரு புரிதலை மேற்கண்ட நூல்கள் எடுத்துரைக்கும் நோக்கில் எழுதப்பட்டது.

சைவ சித்தாந்தம் அடிப்படையில் இறைவன் (பதி), உயிர் (பசு), தளை (பாசம்) என்ற முப்பொருள் உண்மையின் அடிப்படையில் எழுந்தது. உலகில் உள்ள எல்லாச் சமயங்களும் உயிர்களை இறைவன் படைத்தான் எனக் கூறும், ஆனால் சைவ சித்தாந்தம் மட்டும் இறைவன் எவ்வளவு பழமையானவனோ அவ்வளவு உயிர்களும் பழமையானவை எனத் தெளிவுறுத்துகிறது. பதி, பசு, பாசம் இம் முப்பொருள் கொள்கையை விளக்க எழுந்த நூல்களே ‘பதினான்கு சாத்திரம்’ என்று பெருமக்களால் வழங்கப்படுகிறது. இப்பெரும் உண்மைகளைப் எடுத்துரைக்கும் நோக்கில் சைவ சித்தாந்தம் என்னும் இளங்கலைப் பட்டப் படிப்பு நமது கல்லூரியில் நடத்தப்பட்டு வருகிறது.